×

தவறி விழுந்து என்எல்சி ஒப்பந்த தொழிலாளி படுகாயம்

நெய்வேலி, டிச. 17: பீகார் மாநிலம் பாட்னா மெபராக்பூர் பகுதியை சேர்ந்தவர் சேவக் சோ (55). நெய்வேலி என்எல்சி இரண்டாம் அனல் மின் நிலையத்தில் தனியார் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அம்மேரி அருகில் உள்ள குடியிருப்பில் தங்கி வேலைக்கு சென்று வருகிறார். வழக்கம்போல் நேற்று வேலைக்கு சென்றவர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றினார். அப்போது திடீரென்று தவறி விழுந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு பணியாற்றிய என்எல்சி தொழிலாளர்கள் பார்த்தபோது சேவக் சோ தலையில் கம்பியால் குத்தி இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து சேவக் சோவை மீட்டு புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர்.

The post தவறி விழுந்து என்எல்சி ஒப்பந்த தொழிலாளி படுகாயம் appeared first on Dinakaran.

Tags : NLC ,Neyveli ,Sevak Cho ,Patna Mebaragpur ,Bihar ,NLC II Thermal Power Station ,Ammary ,Badukayam ,Dinakaran ,
× RELATED வடமாநில தொழிலாளி மர்ம சாவு