கடலூர்: பெஞ்சல் புயல் மற்றும் வெள்ளப்பெறுக்கு காரணமாக கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஒன்றிய குழுவினர் வருகை தந்துள்ளனர். தற்போது இவர்கள் பண்ருட்டி அருகே உள்ள பண்டை பகுதியில் ஆற்றின் கரை உடைந்ததைஆய்வு செய்ய தொடங்கினர். இதனை தொடர்ந்து மேல்பட்டம்பாக்கம், அழகியநத்தம், குண்டுஉப்பலவாடி, கண்டக்காடு, நாணமேடு உள்ளிட்ட இடங்களிலும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகள், சாலைகள், பாலங்கள், தென்பெண்ணை ஆற்றின் கரைகள், வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் உள்ளிட்டவை சேதம் குறித்தும் ஒன்றிய குழுவினர் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் சேதங்களை கேட்டறிந்தனர்.
இக்குழுவில் ஒன்றிய இணையமைச்சர் ராஜேஸ்குத்தா தலைமையில் 7 பேர் வந்துள்ளனர். ஒன்றிய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை இயக்குனர் பொண்ணுசாமி, ஒன்றிய நிதி மற்றும் செலவீனங்கள் துறை இயக்குனர் சோனாமணி, ஒன்றிய நீர்வளத்துறை இயக்குனர் சரவணன், ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அதிகாரி தனபாலன் குமார், ஒன்றிய மின்சாரத்துறை ஆணைய அதிகாரி ராகுல் பக்கோட்டி உள்ளிட்ட 7 பேர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்திய செந்தில் குமார், மாவட்ட கண்காணிப்பு மோகன், மற்றும் சிறப்பு அலுவலர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் உடனிருந்தார். ஆய்விற்க்கு பின்னர் ஒன்றிய குழு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
The post பெஞ்சல் புயல் மற்றும் வெள்ளப்பெறுக்கு காரணமாக கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஒன்றிய குழு ஆய்வு appeared first on Dinakaran.