சென்னை, டெல்லி உள்பட 7 உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம்: ஜனாதிபதி உத்தரவு

புதுடெல்லி: சென்னை, டெல்லி உள்பட 7 உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன்விவரம் வருமாறு: மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி கே.ஆர்.ராம் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள நீதிபதி மன்மோகன், அங்கேயே புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி ராஜீவ் ஷக்தேர், இமாச்சலப்பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி நிதின் மதுகர் ஜம்தார் நியமிக்கப்பட்டுள்ளார். கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி இந்திர பிரசன்னா முகர்ஜி மேகாலயா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றத்தின் நீதிபதி தஷி ரப்ஸ்தான், அங்கேயே தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் கைத், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உயர்த்தப்பட்டுள்ளார்.

The post சென்னை, டெல்லி உள்பட 7 உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம்: ஜனாதிபதி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: