இதனை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் காரில் சென்று பேருந்தை நிறுத்தினர். பின் பேருந்து ஓட்டுனரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர். தற்போது டிரைவரிடம் வாலிபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதனடிப்படையில், அரசு பேருந்து ஓட்டுநர் ஸ்டிபன், நடத்துனர் மணிகண்டன் ஆகியோரை நாகர்கோவில் மண்டல பொது மேலாளர் மெர்லின் ஜெயந்தி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
The post குமரி அழகப்பபுரம் அருகே பேருந்தை நிறுத்தாத ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்: நாகர்கோவில் மண்டல பொது மேலாளர் உத்தரவு appeared first on Dinakaran.