திருப்பூர்,செப்.13: திருப்பூர், அம்மாபாளையம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் படிக்கின்றனர். இந்நிலையில், இந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு தகுந்த படி வகுப்பறைகள் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. அம்மாபாளையம் திமுகவினர் மற்றும் பஞ்சாலை தொழிலாளர்கள் சார்பில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை கட்டிக்கொடுக்க திட்டமிட்டு வகுப்பறை கட்டுமான பணிகள் நிறைவுற்றது. இந்நிலையில், நேற்று வகுப்பறை திறப்புவிழா நடைபெற்றது.
புதியதாக கட்டபட்ட வகுப்பறைக்கு முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பயிலரங்கம் என பெயர் சூட்டப்பட்டது. இந்த புதிய வகுப்பறையை செல்வராஜ் எம்.எல்,ஏ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் கிருஷ்ணசாமி (எ)மூர்த்தி, துணை செயலாளர் மூர்த்தி,மாவட்ட பிரதிநிதி வெங்கடாசலம்,வார்டு செயலாளர்கள் கமலகக்கண்ணன்,லோகநாதன், நகர்மன்ற துணைத் தலைவர் ராஜேஸ்வரி, கவுன்சிலர்கள்பாரதி, ராஜன், முருகசாமி, பள்ளி தலைமை யாசிரியர் ராமகிருஷ்ணன், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post அம்மாபாளையம் பகுதியில் ரூ.6 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் appeared first on Dinakaran.