×
Saravana Stores

ஹார்ன்பில்

ஹார்ன்பில் என்பது வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படும் பறவை இனமாகும். இவை நீளமான, கீழ்-வளைந்த அலகுகளைக் கொண்டுள்ளன. பெரும்பாலும் பிரகாசமான நிறத்தில் இருக்கும் மற்றும் சில சமயங்களில் மேல் கீழ்த் தாடையில் ஒரு பெட்டி போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும். இதை இருவாட்சி என்றும் அழைப்பர்.

பெண் பறவையானது மரங்கள் அல்லது பாறைகளில் இருக்கும் துளைகள் அல்லது பிளவுகளில் ஆறு வெள்ளை முட்டைகள் வரை இடும். பின்னர், அந்த பெண்பறவை மரம் அல்லது பாறை துளைகளின் நுழைவாயிலைக் கழிவுகள் மற்றும் சேற்றால் மூடி, தன்னைத்தானே அடைத்துக் கொள்ளும். அதில் ஒரு சிறிய பிளவு மட்டுமே எஞ்சியிருக்கும். அதன் மூலம் ஆண் பறவை உணவு கொடுக்கிறது. குஞ்சுகள் கூடுகளை விட்டு வெளியேறும் அளவுக்கு வளர்ந்து, எப்படிப் பறக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்ளும் வரை பாம்புகளிடமிருந்தும், வேறு விலங்குகளிடமிருந்தும் கூடுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கும். இதில் சுமார் 55 விதமான இனங்கள் உள்ளன. இவை பழங்கள், பூச்சிகள் மற்றும் சிறிய விலங்குகளை உண்ணும். ஆப்பிரிக்கா, இந்தோனேசியா, இந்தியாவிலும் அதன் அண்டை நாடுகளிலும் காணப்படுகின்றன. இந்திய துணைக் கண்டத்தில் மிகவும் பொதுவான பரவலான இனம் இந்திய சாம்பல் ஹார்ன்பில்கள் ஆகும்.

The post ஹார்ன்பில் appeared first on Dinakaran.

Tags :
× RELATED வாத்தலகி (Platypus)