ரூ130 கோடி மோசடி: ஜெர்மன் நிறுவனத்தில் ஈடி சோதனை

புதுடெல்லி: ஜெர்மனியை தளமாக கொண்ட ஹூப் ஆல்ஸ்வொர்க் அன்ட் பர்ஸ்ட் ஜிஎம்பிஎச் அன்ட் கோ கேஜியின் துணை நிறுவனமான ஹூப் இந்தியா பிரைவேட் லிமிடெட் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் கடந்த 2010 – 2020 ஆண்டுக்குள்பட்ட காலத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்கள், நிறுவனத்தின் ரூ.130 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் புனேவில் இயங்கும் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.9 கோடி மதிப்புள்ள வங்கி வைப்பு, பரஸ்பர நிதி மற்றும் பிற நிதி முதலீடுகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

The post ரூ130 கோடி மோசடி: ஜெர்மன் நிறுவனத்தில் ஈடி சோதனை appeared first on Dinakaran.

Related Stories: