சென்னை : ஈராயிரம் ஆண்டு ஆதிக்கத்தை புதுமை சிந்தனைகள், முற்போக்கு திட்டங்களால் தகர்த்தெறிந்த சுயமரியாதை சூரியன் கலைஞர் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் கூட்டியுள்ளார்.தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “ஈராயிரம் ஆண்டு கால ஆதிக்கத்தை தன் புதுமை சிந்தனைகளாலும் – முற்போக்குத் திட்டங்களாலும் தகர்த்தெறிந்த சுயமரியாதை சூரியன், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 6-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலை அருகே, ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் முழுவுருவச்சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திருவுருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் இணைந்து மலர்தூவி மரியாதை செலுத்தினோம்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட மற்றொரு பதிவில், “மறைந்தப் பின்பும் போராடி, நமது கலைஞர் அவர்கள் அமைத்துக் கொண்ட மெரினா நினைவிடம் நோக்கி, கழகத் தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேரணியில் கலைஞரின் உடன்பிறப்புகளோடு இன்று பங்கேற்றோம்.தனது நீண்டநெடிய அரசியல் பயணத்தின் மூலம் தமிழ்ச் சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் நடைபோட வைத்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நினைவுகளை நெஞ்சில் சுமந்து இப்பேரணியை நிறைவு செய்தோம். கலைஞர் புகழ் ஓங்கட்டும்!,”இவ்வாறு தெரிவித்தார்.
The post ஈராயிரம் ஆண்டு ஆதிக்கத்தை தகர்த்தெறிந்த சுயமரியாதை சூரியன் கலைஞர்.. கலைஞர் புகழ் ஓங்கட்டும் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் appeared first on Dinakaran.