இதில் கோடிக்கணக்கான சொத்து ஆவணங்கள், பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று காலை முதல் மீண்டும் லோக் ஆயுக்தா போலீசார் கர்நாடகாவில் 60 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருகிறது.
பெங்களூரு, பெங்களூரு ஊரகம், சிமோகா, யாதகிரி, தும்கூர், ஆகிய இடங்களில் சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் இந்த சோதனையை இன்று அதிகாலை முதல் தொடங்கி நடத்தி வருகின்றனர். சோதனை நடந்து வரும் அதிகாரிகள் பட்டியல் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று லோக் ஆயுக்தா போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையால் அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
The post வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்: கர்நாடகாவில் 60 இடங்களில் இன்று லோக் ஆயுக்தா போலீசார் சோதனை appeared first on Dinakaran.