தேர்தல் வெற்றி கொண்டாட்டம் தொண்டர்களுக்கு மதுபாட்டில் சப்ளை செய்த கர்நாடகா பாஜ எம்.பி.

பெங்களூரு: மக்களவை தேர்தலில் சிக்கபள்ளாபுரா தொகுதியில் பாஜ-மஜத கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சுதாகர். இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், நெலமங்களாவில் நேற்று முன்தினம் வெற்றி விழா மற்றும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடந்தது. அப்போது பாஜ மற்றும் மஜத தொண்டர்களுக்கு பிரியாணி சாப்பாடு மற்றும் பீர், மதுபானங்களும் வழங்கப்பட்டன. நீண்ட வரிசையில் நின்றிருந்த பாஜ, மஜத தொண்டர்கள் பீர், மது பான பாட்டில்களை பெறுவதற்கு கடும் போட்டி நிலவியது. முண்டியடித்துக்கொண்டு மது மற்றும் பிரியாணி வாங்கிய பிறகு ஆங்காங்கே திறந்த வெளியில் அமர்ந்து சாப்பிட்டனர்.

இதன் காரணமாக மது பாட்டில்கள் அந்த இடத்தில் குவிந்து கிடந்தன. வரிசையில் வருகிற பாஜ மற்றும் மஜத தொண்டர்களில் சிலர் பீர் பாட்டில் ஏற்கனவே கையில் வைத்துக்கொண்டு கட்டிங் கேட்கிற காட்சிகளும் இதைத்தொடர்ந்து பவுன்சர்கள் அவர்களை விரட்டுகிற காட்சியும் தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார் கூறுகையில், பாஜ எம்பி சுதாகர், அக்கட்சி தொண்டர்களுக்கு மது விருந்து அளித்த விதம் கண்டனத்துக்குரியது. இதற்கு பாஜ தேசிய தலைவர் ஜேபி நட்டா பதில் அளிக்கவேண்டும் என கூறினார்.

The post தேர்தல் வெற்றி கொண்டாட்டம் தொண்டர்களுக்கு மதுபாட்டில் சப்ளை செய்த கர்நாடகா பாஜ எம்.பி. appeared first on Dinakaran.

Related Stories: