சேலம் மாநகராட்சி முன்னாள் மண்டலக்குழு தலைவர் வெட்டிக்கொலை: தொழில் போட்டியா அல்லது முன்பகை காரணமாக என போலீஸ் விசாரணை

சேலம்: சேலம் மாநகராட்சியின் முன்னாள் மண்டல குழு தலைவரும் கொண்டலாம்பட்டி அதிமுக பகுதி செயலாளருமான சண்முகம் நடுரோட்டில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு 9.30 மணி அளவில் சேலம் சஞ்சீவராயன் பேட்டை பகுதியில் உள்ள தனது ரியல் எஸ்டேட் அலுவலகத்தை மூடிவிட்டு தாதகபட்டி காமராஜர் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சண்முகம் சென்று கொண்டிருந்தார். அப்போது மாரியம்மன் கோயில் தெருவில் பதுங்கி இருந்த மர்ம நபர்கள் சண்முகத்தை தடுத்து சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் நிகழ்விடத்திலேயே அவர் மரணமடைந்துவிட்டார். தகவலறிந்து அங்கு திரண்டு வந்த சண்முகத்தின் உறவினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலையாளிகளை கண்டுபிடித்து கைது செய்யும் வரை சடலத்தை எடுக்க அனுமதிக்க மாட்டோம் என கூறி சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம், முன்னாள் மாவட்ட செயலாளர் எம்.கே. செல்வராஜ், சேலம் தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 3 மணி நேர பேச்சு வார்த்தைக்கு பின்னர், சண்முகத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கொலை நடந்துள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து கொலையாளிகளை பிடிக்கும் முயற்சியில் சேலம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாநகர் தாதகாபட்டியை சேந்த 62 வயதான அதிமுக பிரமுகர் சண்முகம் சேலம் மாநகராட்சியின் முன்னாள் மண்டலா குழு தலைவராக இருந்தார்.

முண்டலாம்பட்டி அதிமுகவின் பகுதி செயலாளராக பொறுப்பு வகித்து வந்த சண்முகம் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இவருக்கு 2 மனைவிகள் மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர். ரியல் எஸ்டேட் தொழில் பொடியள் அவர் கொல்லப்பட்டாரா அல்லது அரசியல் பகை அல்லது முன்விரோதம் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். அதிமுக நிர்வாகி வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post சேலம் மாநகராட்சி முன்னாள் மண்டலக்குழு தலைவர் வெட்டிக்கொலை: தொழில் போட்டியா அல்லது முன்பகை காரணமாக என போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: