யூரோ கோப்பை கால்பந்து; ஸ்பெயின் – இங்கிலாந்து காலிறுதிக்கு தகுதி

முனிச்: 17வது யூரோ கோப்பை கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் கொலோன் மைதானத்தில் நேற்றிரவு 12.30 மணிக்கு தொடங்கி நடந்த ரவுன்ட் 16 சுற்று போட்டியில், பிபா தரவரிசையில் 8வது இடத்தில் உள்ள ஸ்பெயின், 74வது இடத்தில் உள்ள ஜார்ஜியா அணிகள் மோதின. இதில் 18வது நிமிடத்தில் ஸ்பெயினின் ராபின் லு நார்மண்ட் சேம்சைடு கோல் அடித்து அதிர்ச்சி அளித்தார். தொடர்ந்து ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்திய நிலையில், 39வது நிமிடத்தில் ரோட்ரி, 51வது நிமிடத்தில் ரபேபியன் ரூயிஸ், 75வது நிமிடத்தில் வில்லியம்ஸ், 83வது நிமிடத்தில் ஓல்மோ கோல் அடித்தனர். முடிவில் 4-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றது. முன்னதாக நடந்த மற்றொரு போட்டியில், இங்கிலாந்து-ஸ்லோவாக்கியா அணிகள் மோதின.

இதில் 25வது நிமிடத்தில், ஸ்லோவாக்கியாவின் இவான் ஷ்ரான்ஸ் கோல் அடித்து முன்னிலை ஏற்படுத்தினார். இதற்கு பதிலடி கொடுக்க இங்கிலாந்து வீரர்கள் கடுமையாக போராடினர். ஆட்டம் கடைசி நிமிடத்தை நோக்கி நகர்ந்த நிலையில், 91வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் வாக்கர் கொடுத்த த்ரோவை, மார்க் க்யூஹி அசிஸ்ட் செய்ய, பை-சைக்கிள் கிக் மூலமாக பெல்லிங்கம் கோலாக்கினார். இதன் மூலமாக ஆட்டம் 1-1 என்ற நிலைக்கு வந்தது. இதன்பின் அளிக்கப்பட்ட கூடுதல் நேரத்தில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஹாரி கேன் 2வது கோலை அடித்தார். முடிவில் இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது. இன்று இரவு 9.30 மணிக்கு பிரான்ஸ்-பெல்ஜியம், இரவு 12.30 மணிக்கு போர்ச்சுக்கல்-ஸ்லோவேனியா அணிகள் மோதுகின்றன.

 

The post யூரோ கோப்பை கால்பந்து; ஸ்பெயின் – இங்கிலாந்து காலிறுதிக்கு தகுதி appeared first on Dinakaran.

Related Stories: