கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

கோவை: வட மாநிலங்களில் இருந்து ரயிலில் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில், கோவை ரயில் நிலையத்தில் நேற்று நடந்த சோதனையில் 40 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 13 வடமாநில வாலிபர்கள்கைது செய்யப்பட்டனர். வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் ரயிலில் கடத்தி வருவதாக ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், தமிழகத்தில் பல்வேறு ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசார் மற்றும் மாவட்ட போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக, கோவை ரயில் நிலையத்தில் நேற்று ரயில்வே பாதுகாப்பு படை, ரேஸ்கோர்ஸ் போலீசார், ரயில்வே போலீசார் சோதனை செய்தனர்.

பாட்னாவில் இருந்து எர்ணா குளம் நோக்கி சென்ற ரயிலில் வந்த பயணிகளில் சிலரிடம் பிளாட்பாரத்தில் வைத்து சோதனை நடத்தப்பட்டது. பொருட்கள், துணிப்பைகளில் போலீசார் சோதனையிட்ட போது சிலரிடம் குட்கா, பான்பராக் போன்ற போதை பாக்கு பாக்கெட்டுகள் இருந்தன. 13 பேரிடம் இருந்து 40 கிலோ எடையிலான போதை பாக்கு பாக்கெட்டுகள் சிக்கியது. இவற்றை ரேஸ்கோர்ஸ் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, பீகாரை சேர்ந்த மணீஷ்குமார் (26), ஷா (23), சாந்தகுமார் (27), ரிஷப் (23) உட்பட 13 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர் appeared first on Dinakaran.

Related Stories: