பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்

பூந்தமல்லி: தஞ்சாவூரில், பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூரில் ‘ஹிஷாப் உத் தஹீரிர்’ என்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 2 பேரின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். தேசிய புலனாய்வு அமைப்பினர் 4 வீடுகளில் 5 மணி நேரத்திற்கும் மேலாக மேற்கொண்ட சோதனையின் போது அங்கிருந்து கைப்பேசிகள், ஹார்டு டிஸ்க்குகள், பென் டிரைவ்கள், டிவிடி, புத்தகங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.

இதனைத்தொடர்ந்து, அப்துல் ரஹ்மான்(22), முஜிபுர் ரஹ்மான்(46) ஆகிய இருவரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். அவர்கள் இருவரையும் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதால், நேற்று முன்தினம் இரவு சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதியின் வீட்டிற்கு சென்று நீதிபதி இளவழகன் முன்பு இருவரையும் போலீசார்ஆஜர்படுத்தினர். இதனையடுத்து இருவரையும் ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல் appeared first on Dinakaran.

Related Stories: