ஜூன் 1-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம் நடைபெறும்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: ஜூன் 1-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் கூட்டம் நடைபெறும் கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி, ஜூன்-4 அன்று நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை குறித்து கலந்தாலோசித்திட, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக வேட்பாளர்கள் தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்தாலோசனைக் கூட்டம்” வருகிற 01-06-2024 சனிக்கிழமை காலை 11.00 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.

இக்கூட்டத்தில் தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ, எம்.பி., வாக்கு எண்ணிக்கையின்போது தலைமை முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள் குறித்து ஆலோசனை வழங்குவார். அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் கழக வேட்பாளர்கள் தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஜூன் 1-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம் நடைபெறும்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: