கோயம்பேடு பூ மார்க்கெட் வருகின்ற 19ம் தேதி வழக்கம்போல் செயல்படும்: சங்க துணைத் தலைவர் அறிவிப்பு

அண்ணாநகர்: கோயம்பேடு பூ மார்க்கெட் வருகின்ற 19ம் தேதி வழக்கம்போல் செயல்படும் என்று அந்த சங்க துணை தலைவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவு நாளைமறுநாள் (19ம் தேதி) நடைபெறுகிறது. இதையொட்டி அன்றைய தினம் கோயம்பேடு காய்கறிகள், பழம் மற்றும் உணவு தானிய மார்க்கெட்டுகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று அனைத்து கூட்டமைப்பு சங்கம் அறிவித்தது. இந்தநிலையில் வரும் 19ம் தேதி கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு விடுமுறை இல்லை என்றும் வழக்கம்போல் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறும் போது, ‘’நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு 19ம் தேதி பூ மார்க்கெட் வழக்கம்போல் இயங்கும். எனவே சென்னை புறநகர் மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதியில் இருந்து பூக்கள் வாங்க வரும் சில்லறை வியாபாரிகள் பூக்களை வாங்கி செல்லலாம். 19ம் தேதி பூ மார்க்கெட் விடுமுறை என்று பொய்யான செய்திகளை யாரும் நம்பவேண்டாம்’ என்றார்.

The post கோயம்பேடு பூ மார்க்கெட் வருகின்ற 19ம் தேதி வழக்கம்போல் செயல்படும்: சங்க துணைத் தலைவர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: