கோடை வெயில் எதிரொலி.. மதுரையில் ஒரு முட்டை மூன்று ரூபாய்க்கு விற்பனை: விலை குறைவால் போட்டி போட்டு வாங்கிச்சென்ற மக்கள்..!!

மதுரை: மதுரையில் ஒரு முட்டை மூன்று ரூபாய்க்கு விற்கப்பட்டதால் மக்கள் போட்டி போட்டு கொண்டு வாங்கி சென்றனர். தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த சில மாதங்களாகவே வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது. வெயிலினை கருத்தில் கொண்டு, உடலினை குளிர்ச்சியாக்கவும், நீர்நடுநிலைத்தன்மையை கட்டுக்குள் வைக்கவும் பொதுமக்கள் அதிகளவில் பழங்கள் மற்றும் அதனைச் சார்ந்த குளிர்பானங்களை பருகி வருகின்றனர். இதனால் பழங்களின் தேவை அதிகமாகி வருகிறது. மேலும் விலையும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

மதுரையில் ஒரு முட்டை மூன்று ரூபாய்க்கு விற்கப்பட்டதால் மக்கள் போட்டி போட்டு கொண்டு வாங்கி சென்றனர். இந்நிலையில், முட்டை மற்றும் கோழி உற்பத்தி செய்யும் மாவட்டங்களான சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் வெயிலின் காரணமாகவும், கேரளாவில் பரவி வரும் பறவை நோய் காரணமாக முட்டையின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. இந்நிலையில், மதுரையில் மூன்று ரூபாய்க்கு விற்க்கப்படும் முட்டையை பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.

The post கோடை வெயில் எதிரொலி.. மதுரையில் ஒரு முட்டை மூன்று ரூபாய்க்கு விற்பனை: விலை குறைவால் போட்டி போட்டு வாங்கிச்சென்ற மக்கள்..!! appeared first on Dinakaran.

Related Stories: