சிதம்பரம் கோவிலில் பொது தீட்சிதர்கள் குழந்தை திருமணங்கள் செய்வது குறித்து புகார் தந்தால் நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சிதம்பரம் கோவிலில் பொது தீட்சிதர்கள் குழந்தை திருமணங்கள் செய்வது குறித்து புகார் தந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம் கோவில் குழந்தை திருமணம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சரண்யா என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுவில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொது தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. எனவே சிதம்பரம் கோவிலில் குழந்தை திருமணங்களை தடுக்க நிரந்தர குழு அமைக்க வேண்டும் என மனுதாரர் வலியுறுத்தியிருந்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தமிழகம் முழுவதிலும் குழந்தை திருமணங்களை கண்காணிப்பதற்கும், தடுப்பதற்கும் சமூக நல அதிகாரி அடங்கிய குழு ஏற்கனவே இருக்கிறது. அவ்வாறு ஒரு அதிகாரி இருக்கும் போது கூடுதலாக எதிர்க்கு நிரந்தர கண்காணிப்பு குழுவை நியமிக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பினர். அதுமட்டுமின்றி, மாவட்டந்தோறும் இருக்கக்கூடிய சமூகநல அதிகாரிகள் குழந்தை திருமணம் தொடர்பான புகார் மீது உடனே கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். மேலும் நிரந்தர குழுவை அமைக்க தேவையில்லை என்ற கருத்தையும் நீதிபதிகள் பிறப்பித்து, வழக்கின் விசாரணையை ஜூன் மாதத்திற்கு தள்ளிவைத்தனர்.

The post சிதம்பரம் கோவிலில் பொது தீட்சிதர்கள் குழந்தை திருமணங்கள் செய்வது குறித்து புகார் தந்தால் நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: