ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு : தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணித்தது பிசிசிஐ!!

மும்பை: டி20 உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 2 முதல் 29-ம் தேதி வரை மேற்கிந்திய தீவுகள், அமெரிக்காவில் நடைபெறுகிறது. ஆகவே டி20 உலகக்கோப்பைக்கான அணியை அறிவிப்பதற்கு நாளை கடைசி தேதியாக பார்க்கப்பட்டது. இதையொட்டி பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தலைமையில் இந்திய அணியினை தேர்வு செய்யும் இறுதி ஆலோசனை கூட்டம் அகமதாபாத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு, டி20 உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ தலைமை அறிவித்துள்ளது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கேப்டனாக ரோஹித் ஷர்மாவும், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டு வீரர்கள் ஒருவருக்கு கூட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதே போல், தமிழ்நாடு வீரர்கள் நடராஜன், அஸ்வின், ஷாருக்கான், சாய் கிஷோர், வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் இடம்பெறவில்லை. மேலும் கே.எல்.ராகுல் இடம்பெறவில்லை. மாறாக இந்திய அணியில் முதல்முறையாக ஷிவம் துபே, சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைத்துள்ளது.

அதன்படி,

ரோஹித் சர்மா(c)
ஜெய்ஸ்வால்
விராட் கோலி
சூர்யகுமார் யாதவ்
ரிஷப் பண்ட் (WK)
சஞ்சு சாம்சன் (WK)
ஹர்திக் பாண்ட்யா (vc)
சிவம் துபே
அக்ஸர் படேல்
ரவீந்திர ஜடேஜா
குல்தீப் யாதவ்.
சாஹல்
அர்ஷ்தீப் சிங்
பும்ரா.
சிராஜ்

RESERVED PLAYERS

கில், ரிங்கு சிங், கலீல் அஹ்மத், ஆவேஷ் கான்

The post ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு : தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணித்தது பிசிசிஐ!! appeared first on Dinakaran.

Related Stories: