மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க ஏப்ரல் .19-ம் 10,214 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்துதுறை அறிவிப்பு


சென்னை: ஏப்ரல் .19-ம் தேதி மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக 10,214 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துதுறை அறிவித்துள்ளது. ஏப்ரல்.19-ல் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 10,214 சிறப்பு பேருந்துகள் பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படுகின்றன. 17, 18-ல் சென்னையில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 2,970 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. வாக்களிப்பதற்காக சொந்த ஊர் செல்வோர் கூட்ட நெரிசலை தவிர்க்க ஏப்.16, 17-ல் பயணம் மேற்கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் 19 ஆம் தேதி முதல் தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் முதல் கட்டமாக வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் நிறைவடைகிறது.

இதனால் அரசியல் கட்சிகள் உச்சக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் வெளியூரில் உள்ள வாக்காளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வரும் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 2,970 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 7,154 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் 3,060 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 10,214 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளையும் நாளை மறுநாள் சென்னையில் இருந்து புறப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு பெரும்பான்மையான வழித்தடங்களில் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க ஏப்ரல் .19-ம் 10,214 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்துதுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: