நேற்று(29.11.2023) முதல் சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக ‘கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள் உள்ளிட்டோர் நிவாரணப் பணிகளை மேற்கொள்வீர்” என்று நேற்று இரவு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி இன்று (30.11.2023) காலை பொதுப்பணிகள், நெடுஞ்சாவைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கிண்டி, கத்திபாரா, ஜவஹர்லால் நேரு சாலை {முழுவதும்), உதயம் தியேட்டர் சந்திப்பு போன்ற பகுதிகளுக்குச் சென்று மழைநீர் தேங்கியுள்ளதா என்பதையும், மழைநீர் வடிகால்வாயில், அடைப்பின்றி மழைநீர் வேகமாக வடிகிறதா என்பதையும் ஆய்வு செய்தார்கள்.
மேலும், மழைநீர் தேங்கும் இடங்களில் போதுமான பணியாளர்கள் மோட்டார் பம்பு, JCB. மரம் அறுக்கும் இயந்திரங்கள் கையிருப்பில் வைத்திருக்க அறிவுறுத்தினார்கள்.மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் மோட்டர் பம்பு மூலம் வெளியேற்றப்படும் இடங்களையும் பார்வையிட்டு, விரைவாக வெளியேற்றிட வேண்டுமென்று அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்கள். இந்த ஆய்வின்போது. நெடுஞ்சாலைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், தலைமைப் பொறியாளர் இரா.சந்திரசேகர், கோட்டப் பொறியாளர். வ.ரவி. உதவிப்பொறியாளர் ராம்நரேஷ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
The post சென்னையில் பெய்த கனமழை காரணமாக மழைநீர் தேங்கி இருக்கும் இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ.வேலு appeared first on Dinakaran.