அதிமுக – பாஜக கூட்டணி முறிவு நாடகம்? : கடந்த காலங்களிலும் உறவு முறிந்து மீண்டும் மலர்ந்ததாக அரசியல் தலைவர்கள் கருத்து!!

சென்னை : அதிமுக – பாஜக கூட்டணி முறிவு நாடகம் என தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கட்சி தலைவர்களும் விமர்சித்து வருகின்றனர்.மத்தியில் கூட்டணியில் இருந்தாலும் தமிழ்நாட்டில் அதிமுகவுக்கும் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலைக்கும் இடையே மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் எதிரொலியாக அவதூறு பேச்சு, நக்கல், கிண்டல், கேலி என்று அதிமுகவை தொடர்ந்து விமர்சித்து வந்த அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டது.இதையடுத்து பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அறிவித்துள்ளபோதும் இரு கட்சிகளும் மீண்டும் கூட்டணி அமைக்கக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், மீண்டும் அதிமுக – பாஜக இடையே கூட்டணி உருவாகும் என கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.கடந்த காலங்களிலும் அதிமுக – பாஜக கூட்டணி முறிந்து மீண்டும் உறவு வைத்துள்ளது.பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என 1999ல் அறிவித்த ஜெயலலிதா 2004ம் ஆண்டு மீண்டும் கூட்டணி அமைத்தார்.2014ம் ஆண்டு மோடியா ? லேடியா? என ஜெயலலிதா பிரச்சாரம் செய்த நிலையில், அவரது மறைவிற்கு பின் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தது. 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுக – பாஜகவுடன் கூட்டணி வைத்தது குறிப்பிடத்தக்கது.

The post அதிமுக – பாஜக கூட்டணி முறிவு நாடகம்? : கடந்த காலங்களிலும் உறவு முறிந்து மீண்டும் மலர்ந்ததாக அரசியல் தலைவர்கள் கருத்து!! appeared first on Dinakaran.

Related Stories: