மதுரை – தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு

சென்னை: மதுரை – தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியிட்டுள்ளது. மதுரை- அருப்புக்கோட்டை- தூத்துக்குடி அகல ரயில் பாதைத் திட்டம் கடந்த 1999-2000 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. 15கி.மி. தொலைவு பாதையைக் கொண்டதாக இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.

தொலைதூரத்துக்கான ரயில் போக்குவரத்து வசதி இல்லாத அருப்புக்கோட்டை விளாத்திக்குளம் பகுதி மக்களுக்கு இந்தத் திட்டம் பெரும் வரப்பிரசாதமாக இருக்கும் எனவும், தூத்துக்குடி துறைமுகத்தையும், மதுரை விமான நிலையத்தையும் இணைக்க கூடிய திட்டாக இருப்பதார், உக்தக் ஓட்தயில் முயர் மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களின் வணிகப் பொருளாதாரம்-மேம்படும் எனவும் கருதப்பட்டது.

திட்டத்தின் முதல் கட்டப் பணிகளாக தூத்துகுடி மாவட்டம், மீளவிட்டான -மேல்மருதூர் வரையிலான 18 கி.மீ தொலைவுக்கு கடந்த ஆண்டு அகல ரயில் பாதை அமைக்கப்பட்டது. இந்த பாதையில் கடந்த 2022-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் சோதனை ரயில் ஓட்டமும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த நிலையில், மதுரை-தூத்துக்குடி புதிய ரயில் பாதைத் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவவகள் வெளியாகின.

இதனிடையே, மதுரை தூத்துக்குடி புதிய அகல ரயில் பாதைத் திட்டப் பணிகளின் நிலைகுறித்து சென்னையைச் சேர்ந்த வரதன் ஆனந்தப்பன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மதுரை, விருதுநகர் தூத்துக்குடி நிர்வாகங்களிடம் தகவல் கோரியிருந்தார்.

இதில் விருதுநகர் மாவட்டத்திலிருந்து அண்மையில் அளிக்கப்பட்ட பதிலில்,புதிய ரயில் பாதை பணிக்காக காரியாபட்டி, அருப்புக்கோட்டை வட்டங்களுக்குள்பட்ட பகுதிகளில் 794, 44 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்திக் தரக்கோரி ரயில்வே நிர்வாகத்திலிருந்து நிலைத்திட்ட அட்டவணை கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தமிழக அரசின் அரசனை வெளியானதும் நிலம் கையகப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மதுரை-தூத்துக்குடி புதிய அகல ரயில் பணிக்கு விருதுநகர் மதுரை மாவட்டங்களில் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு கடந்த 22-ம் தேதி அரசனை வெளியிட்டது. இதன்முலம் இந்த புதிய அகல ரயில் பாதைத்திட்டம் மீண்டு புத்துயிர் பெறும் என வணிகர்கள், ரயில் பயன்பாட்டாளர்கள் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் தெரிவித்துள்ளனர்.

The post மதுரை – தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: