×
Saravana Stores

நீர்வரத்து சீரானதால் 58 நாட்களுக்கு பிறகு கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

தேனி: நீர்வரத்து சீரானதால் 58 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க கும்பக்கரை அருவியில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மேலும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டதால் கோவிலுக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் கும்பக்கரையில் புனித நீராடி செல்வார்கள்.

கொடைக்கானலில் பெய்த கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் குளிக்க அனுமதி மறுத்தனர். எனவே பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். கடந்த 58 நாட்களாக தண்ணீர் அதிக அளவில் கொட்டியது. இந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து சீரானது. இதனால் அனுமதி அளிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஏராளமானோர் கும்பக்கரை அருவில் குளித்து சென்றனர்.

Tags : Kumbakarai Falls ,
× RELATED கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்..!!