×
Saravana Stores

ஊட்டி தாவரவியல் பூங்காவில் வண்ண நிறங்களில் பூத்து குலுங்கும் கள்ளி செடி : சுற்றுலா பயணிகள் ஈர்ப்பு

ஊட்டி, :நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே  மாதங்களில் கோடை விழா நடத்தப்படுகிறது. கோடை சீசனை அனுபவிக்க வரும்  சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு ஆண்டுதோறும் தாவரவியல்  பூங்காவில் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி ஆகியவை  நடத்தப்படுவது வழக்கம். அடுத்த ஆண்டு மே மாதம் நடக்கவுள்ள மலர்  கண்காட்சி மற்றும் ரோஜா கண்காட்சிக்காக பூங்காக்களை தயார் செய்யும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஊட்டி ரோஜா பூங்காவில், ரோஜா கண்காட்சிக்காக  தற்போது செடிகள் கவாத்து செய்யப்பட்டுள்ளது. கவாத்து செய்யப்பட்ட  செடிகளுக்கு இயற்கை உரம் கலந்த மண் கொட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் கண்ணாடி மாளிகை முன்பு வண்ண நிறங்களில் பூத்துள்ள கள்ளி செடி, சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Tags : Ooty Botanical Garden ,
× RELATED மண் தொட்டிகள் வழக்கொழிந்தது ஊட்டி...