சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 7 ஆயிரத்து 395 இளநிலை பட்டப்படிப்புகளில் சேர 3 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதனால் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேட்ட பாடப்பிரிவுகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
தமிழ் மொழி பட்டபடிப்புக்கு தமிழ் மொழியில் பயின்றவர்களுக்காக தனி தரவரிசை பட்டியலும், ஆங்கில மொழி பட்டபடிப்புக்கு ஆங்கில பாடத்தில் பெற்ற மதிப்பெண்கள், பிற இளநிலை பட்டபடிப்புகளுக்கு மற்ற 4 பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தனி தரவரிசை பட்டியலும் வெளியிடப்பட்டது. மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர் உள்ளிட்டோருக்கான கலந்தாய்வு மே 29ம் தேதி தொடங்கி நேற்று (மே 31ம் தேதி) வரை நடைபெற்றது. இந்த நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது. இளநிலை படிப்புகளில் 1,07,299 இடங்களுக்கு சுமார் 2.46 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
3 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பிரிவு கலந்தாய்வில் 3,363 பேர் இடங்களை தேர்வு செய்தனர். ஆன்லைனில் தொடங்கிய முதல்கட்ட பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூன் 1 முதல் 10ம் தேதி வரையும், ஜூன் 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை 2ம் கட்ட கலந்தாய்வும் நடைபெறவுள்ளது. ஜூன் 22ம் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது..!! appeared first on Dinakaran.