ரிமோட் கண்ட்ரோல் மூலம் காங்கிரஸ் அரசு செயல்பட்டது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

ஜெய்ப்பூர்: ரிமோட் கண்ட்ரோல் மூலம் காங்கிரஸ் அரசு செயல்பட்டது என பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் உள்ள பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி; நாட்டில் புதியபடைப்புகளின் சகாப்தம் நடைபெறுகிறது. பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சி குடிமக்களின் சேவை, நல்ல நிர்வாகம், ஏழைகள் நலனுக்காக அர்ப்பணிக்கப்படுகிறது. ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் வளர்ச்சி குறித்து பேசுகிறது.

2014க்கு முன்பு நாட்டு மக்கள் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். 2014க்குமுன் நாட்டில் பயங்கரவாத தாக்குதல்கள் அடிக்கடி நடந்தன. பெரிய நகரங்களில் தீவிரவாத தாக்குதல்கள் நடந்தன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடந்தன. எல்லையில் சாலை அமைக்க காங். அரசு பயந்தது. ஏழைகளை ஏமாற்றுவது காங்கிரஸின் கொள்கை; இதனால் ராஜஸ்தான் மக்கள் அவதியடைந்துள்ளனர். 3 ஆண்டில் 9 கோடி பேருக்கு குடிநீர் இணைப்புதரப்பட்டுள்ளது; காங். அரசு இதை வழங்க 20 ஆண்டு எடுத்திருக்கும். ரிமோட் கண்ட்ரோல் மூலம் காங்கிரஸ் அரசு செயல்பட்டது; இளைஞர்களுக்கு முன் இருள் இருந்தது.

ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் (OROP) என்ற பெயரில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு காங்கிரஸ் தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது.பாஜக அரசு ஓஆர்ஓபியை அமல்படுத்தியது மட்டுமின்றி முன்னாள் ராணுவ வீரர்களுக்கு நிலுவைத் தொகையும் வழங்கியது. நாட்டின் வளர்ச்சியை உண்ணும் ஊழல் அமைப்பை காங்கிரஸ் ஆட்சி உருவாக்கியது என குற்றம் சாட்டினார்.

The post ரிமோட் கண்ட்ரோல் மூலம் காங்கிரஸ் அரசு செயல்பட்டது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: