தர்மபுரி: நெல் மூட்டைகள் காணாமல் போனதாக எழுந்த புகாரையடுத்து மாவட்ட ஆட்சியர் சாந்தி நேரில் ஆய்வு செய்து வருகிறார். தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் சேமித்து வைக்கப்பட்ட 7 ஆயிரம் மூட்டை நெல் மாயமானதாக புகார் எழுந்தது. இதன் மதிப்பு ரூ.61 லட்சமாகும். இதையடுத்து அதிகாரிகள், தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். 7,000 டன் நெல் மூட்டைகள் காணாமல் போகவில்லை என நுகர் பொருள் வாணிபக் கிடங்கு சார்பில் விளக்கம் அளித்துள்ளது. 22,000 டன் நெல் மூட்டைகளில் 7,000 டன் நெல் மூட்டைகள் 68 அரவை ஆலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
நெல் மூட்டைகள் முழுவதும் அரவைக்கு அனுப்பிய பிறகு நெல் மூட்டைகள் குறைந்துள்ளதா என்பது தெரியவரும். 80க்கும் மேற்பட்ட லாரிகள் வரவழைக்கப்பட்டு, நெல் மூட்டைகளை அரவைக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது என்றும் கூறியுள்ளது. நெல் மூட்டைகள் காணாமல் போனதாக எழுந்த புகாரையடுத்து மாவட்ட ஆட்சியர் சாந்தி நேரில் ஆய்வு செய்தார். நுகர்பொருள் வாணிப கிடங்கு அலுவலர்கள் நெல் அரவை ஆலைகளில் ஆய்வு செய்தனர். நுகர்பொருள் வாணிபக் கிடங்கு மூலம் அனுப்பப்பட்ட மூட்டைகள் மட்டுமே இருக்கின்றனவா என ஆய்வு செய்தார்.
தருமபுரி மாவட்ட நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஆய்வு செய்த பின் ஆட்சியர் சாந்தி செய்தியாளர்களை சந்த்தித்து பேசினார். அப்போது; தருமபுரி மாவட்ட நுகர்பொருள் வாணிப கிடங்கில் 7,000 டன் நெல் மூட்டைகள் மாயமாகவில்லை. நெல் மூட்டைகள் காணாமல் போனதாக வெளியான தகவலில் உண்மையில்லை. நெல் மூட்டைகளை அரவைக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. நெல் மூட்டைகளை கணக்கிட சென்னையிலிருந்து குழு வரவுள்ளது எனவும் கூறினார்.
The post தருமபுரி மாவட்ட நுகர்பொருள் வாணிப கிடங்கில் 7,000 டன் நெல் மூட்டைகள் மாயமா?.. ஆட்சியர் சாந்தி விளக்கம்..! appeared first on Dinakaran.