4வது டி20 போட்டி நியூசி அணி வென்றது

விசாகப்பட்டினம்: இந்தியா – நியூசி இடையிலான 4வது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீசியது. நியூசி அணியின் துவக்க வீரர்கள் டெவான் கான்வே (44 ரன்), டிம் செபெர்ட் (62 ரன்) சிறப்பாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 100 ரன் குவித்தனர். பின் வந்த ரச்சின் ரவீநத்திரா 2, கிளென் பிலிப்ஸ் 24, மார்க் சாப்மேன் 9 ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

அடுத்து வந்த டேரில் மிட்செல் கடைசி நேரத்தில் அதிரடி காட்டி ஆட்டமிழக்காமல் 18 பந்துகளில் 3 சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 39 ரன் விளாசினார். அவருடன் இணை சேர்ந்தாடிய கேப்டன் மிட்செல் சான்ட்னர் 11, ஜாக் போல்க்ஸ் 13 ரன்களில் அவுட்டாகினர். 20 ஓவர் முடிவில் நியூசி, 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன் குவித்தது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங் தலா 2, ஜஸ்பிரித் பும்ரா, ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

216 ரன் இலக்குடன் 2வது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி 18.4 ஓவரில் 165 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் நியூசி 50 ரன் வித்தியாசத்தில் வென்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷிவம் தூபே 65 ரன், ரிங்கு சிங் 39 ரன் எடுத்தனர். நியூசி பந்து வீச்சில் சாண்ட்னர் 3 விக்கெட், ஜேக்கப், இஷ் சொதி தலா 2 விக்கெட், சகாரி, மேட் ஹென்ட்ரி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

Related Stories: