ஐசிசி டி20 தரவரிசை 7ம் இடம் பிடித்த சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் அபிஷேக்

துபாய்: ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய டி20 அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் 5 நிலைகள் உயர்ந்து 7ம் இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் முடிந்த இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான டி20 போட்டிகளில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் அசத்தலாய் ஆடி ரன்களை குவித்து வருகிறார். முதல் டி20யில் 32, 2வது போட்டியில் ஆட்டமிழக்காமல் 82, 3வது போட்டியில் ஆட்டமிழக்காமல் 57 ரன்களை அவர் குவித்தார்.

இதன் மூலம், நேற்று வெளியான ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசை பட்டியலில் சூர்யகுமார், 5 நிலைகள் உயர்ந்து 7ம் இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 929 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார்.

இங்கிலாந்தின் பில் சால்ட் 2, இந்திய வீரர் திலக் வர்மா 3, இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் 4, பாகிஸ்தானின் ஷாகிப்ஸதா ஃபர்ஹான் 5, இலங்கையின் பதும் நிசங்கா 6வது இடங்களில் மாற்றமின்றி தொடர்கின்றனர். ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், நியூசிலாந்தின் டிம் செபர்ட் தலா ஒரு புள்ளி சரிந்து, முறையே 8, 9 மற்றும் 10ம் இடங்களுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Related Stories: