கொல்கத்தா : பாராமதி விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்தது குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தேகத்தை கிளப்பியுள்ளார். அதில், “பாஜக கூட்டணியில் இருந்து விலகத் தயார் என சில தினங்களுக்கு முன்பு அஜித் பவார் கூறியிருந்த நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது. ஆளுங்கட்சியில் உள்ளவருக்கே இந்த நிலைமை என்றால் எதிர்க்கட்சியினரின் நிலை என்ன?. அஜித் பவார் மரணம் குறித்து உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்”, இவ்வாறு தெரிவித்தார்.
