சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,200 உயர்ந்தது. காலையில் சவரனுக்கு ரூ.2,960 உயர்ந்த நிலையில் மீண்டும் ரூ.2,240 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,24,880க்கும், ஒரு கிராம் ரூ.15,610க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
உலக சந்தையில் ஏற்பட்ட தொடர் அழுத்தங்கள் காரணமாக இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இன்று மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1.22 லட்சத்தைத் தாண்டியுள்ளது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.400ஐ முதல் முறையாக எட்டியுள்ளது. இது இதுவரை இல்லாத உச்சமாகும்.
கடந்த நவம்பர் 1ம் தேதி ஒரு பவுன் விலை ரூ.90,480ஆக இருந்தது. இந்த விலை, டிசம்பர் 1ம் தேதி ரூ.96,560 ஆக அதிகரித்தது. டிசம்பர் 15ம் தேதி ஒரு லட்சம் ரூபாய் என்ற மைல்கல்லை முதல் முறையாக கடந்தது. தங்கத்தின் விலை ஜனவரி 1ம் தேதி ரூ.99,520 ஆக இருந்தது.
எனினும், இம்மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் மட்டுமல்லாது வெள்ளியின் விலையும் போட்டி போட்டுக் கொண்டு அதிகரித்து வருகிறது. சமீப நாட்களாக ஒவ்வொரு நாளுமே தங்கம், வெள்ளி விலை புதிய வரலாற்று உச்சத்தை சந்தித்து வருகிறது.
அந்த வகையில் இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்கட்கிழமை தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக ரூ.1,20,200 என்ற மைல்கல்லை எட்டியது. ஒரு கிராம் 15,025 ரூபாயாக விற்பனை ஆனது. இதே போல வெள்ளியின் விலை ஒரு கிராம் 275 ரூபாயாக விற்பனையானது.
இதனிடையே நேற்று தங்கம் விலை அதிரடியாக குறைந்த நிலையில், வெள்ளியின் விலை புதிய உச்சத்துக்கு சென்றது. நேற்று சவரனுக்கு ரூ.520 குறைந்து ஒரு சவரனின் விலை ரூ.1.19,680 ஆக ஒரு விற்பனை ஆனது. இருப்பினும், வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.12,000 அதிகரித்தது. வெள்ளி நேற்று கிராமுக்கு ரூ.387 என்ற புதிய வரலாற்று உச்சத்தை தொட்டது.
இதையடுத்து தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு ஒரேயடியாக ரூ.2960 அதிகரித்து ஒரு சவரனின் விலை ரூ.1,22,640 ஆகவும், ஒரு கிராமுக்கு ரூ.370 உயர்ந்து ஒரு கிராம் விலை ரூ.15,330 அக உயர்ந்து விற்பனை ஆகி வந்தது. இதே போல வெள்ளியின் விலை இன்று கிலோவுக்கு ரூ.13,000 அதிகரித்து முதல் முறையாக ஒரு கிலோவின் விலை ரூ.4 லட்சத்தை தொட்டது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.387ல் இருந்து இன்று ரூ.400 என்ற புதிய உச்சத்தை தொட்டது.
இந்நிலையில் தற்போது தங்கம் விலை மீண்டும் உயர்ந்து ஷாக் கொடுத்தது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,200 உயர்ந்தது. காலையில் சவரனுக்கு ரூ.2,960 உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் ரூ.2,240 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,24,880க்கும், ஒரு கிராம் ரூ.15,610க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
