நெல்லை: தேனீ வளர்ப்பில் ஈடுபடும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் இயற்கையான முறையில் தேன் சேகரித்து தொழில் முனைவோராக திகழ்ந்து வருகிறார். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே இசைக்கிமுத்து என்ற இளைஞர் விவசாய சார்ந்து படித்து முடித்து 6 ஆண்டுகளாக தேனீ வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார். முதலில் 10 பெட்டிகளில் தேனீ வளர்ப்பில் இப்பட்ட அவர் தற்போது 50க்கும் மேற்பட்ட பெட்டிகளில் தேனீக்களை வளர்த்து இயற்கையான முறையில் தேன் சேகரித்து விற்பனை செய்து வருகிறார். தொடர்ந்து ஆன்லைன் மூலம் தேனீ வளர்ப்பை விளம்பரை செய்து அதன் மூலம் லட்சக்கணக்கான ஆதரவாளர்களை பெற்றுள்ளார். மேலும் மாதம் தோறும் 100 பேருக்கு தேனீக்கள் வளர்ப்பு குறித்து இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார்.
இசைக்கிமுத்து தேன் பண்ணையில், மலை தேன், கொம்பு தேன், முருங்கை தேன் உள்ளிட்ட பல்வேறு வகையான தேன்கள் இயற்கையான முறையில் சேகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றனர். உள்ளூர் மற்றுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் கிலோ கணக்கில் அவரிடம் தேன் வாங்கி செல்கின்றனர். இசைக்கிமுத்திடம் 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைபார்த்து வந்து நிலையில், இயற்கையான முறையில் தேன்கள் வளர்ப்பில் ஈடுபட்டு தொழில் முனைவோராக வளர்ந்துள்ள அவருக்கு பாராட்டுக்கள் குவிக்கின்றனர்.
