சென்னை: தவெகவுக்கு நான் வருவேன் என்று செங்கோட்டையன் நம்பினார் என டிடிவி தினகரன் பேட்டி அளித்தார். தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவு எடுத்தது என்று தனிப்பட்ட விருப்பம் என தெரிவித்தார். செங்கோட்டையன் என்னை அழைத்த போது நட்பின் காரணமாக உடனடியாக நான் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை” என தவெகவுடன் கூட்டணி வைக்கத்தான் டிடிவி தினகரன் விரும்பினார் என செங்கோட்டையன் கூறிய நிலையில் டிடிவி தினகரன் விளக்கமளித்துள்ளார். மேலும் டெல்லிக்கு நான் சென்ற போது கூட செங்கோட்டையன் ஏன் தவெகவிற்கு சென்றுவிட்டார் என்றுதான் என்னிடம் கேட்டார்கள் எனவும் டிடிவி தெரிவித்துள்ளார்
செங்கோட்டையன் அழைத்தபோது நட்பின் காரணமாக உடனடியாக நான் அதை மறுக்கவில்லை. என்.டி.ஏ. கூட்டணியில் அமமுக இணைந்ததற்கு சூழ்நிலை காரணமில்லை. தனக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். என்னை தவெக கூட்டணிக்கு அழைத்தார் செங்கோட்டையன், பார்க்கலாம் என்று கூறினேன். அரசியலில் தேவையில்லாத சகுனிகள் இருக்கிறார்கள். சூழ்நிலை காரணமாக டிடிவி தினகரனால் எங்கள் கூட்டணிக்கு வர முடியவில்லை என செங்கோட்டையன் கூறியிருந்தார்.
