×

அசாமில் பேரவை தேர்தலையொட்டி 6 லட்சம் தேயிலை தொழிலாளர்களுக்கு தலா ரூ.5,000 நிதி: முதல்வர் ஹிமந்த சர்மா தொடங்கி வைத்தார்

டூம்டோமா: அசாமில் தேயிலை தொழிலாளர்களுக்கு ரூ.5,000 நிதி உதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று தொடங்கி வைத்தார். அசாமில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அசாமில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கலந்து கொண்டார். அப்போது, 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தேயிலை தொழிலாளர்களுக்கு தலா ரூ.5,000 நிதி உதவி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “அசாமின் 27 மாவட்டங்கள் மற்றும் 73 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள 836 தேயிலை தோட்டங்களில் உள்ள 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஒரேநேரத்தில் ரூ.300 கோடி நிதி உதவி வழங்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Assam Assembly elections ,Chief Minister ,Himanta Biswa Sarma ,Doomdoma ,Assam ,Assembly ,Himanta… ,
× RELATED இந்தோனேஷியாவில் நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலி