×

காஷ்மீரில் மீண்டும் பனிபொழிவு; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஸ்ரீநகர்: காஷ்மீரின் உயரமான பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால் மலைப்பாங்கான மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்பட்டன. பனிப்பொழிவு நிறைந்த பகுதிகளில் ஒரு அடி வரை பனி குவிந்துள்ளது.காஷ்மீரில் பனி அகற்றும் இயந்திரங்கள் மூலம் சாலைகள் மற்றும் முக்கிய பகுதிகளில் குவிந்துள்ள பனிக்கட்டிகள் அகற்றும் பணி நடந்து வருகிறது. பனிபொழிவினால் மூடப்பட்டிருந்த நகர் -ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் பனிகள் அகற்றப்பட்டு நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.

Tags : Kashmir ,Srinagar ,
× RELATED ‘வந்தே மாதரம்’ பாரத மாதாவிற்கான...