கவுகாத்தி: அசாமில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த 15 பேர் நேற்று முன்தினம் இரவு நாடு கடத்தப்பட்டனர். ஆனால் அவர்கள் அனைவரும் அசாமின் எந்த மாவட்டத்தில் தங்கி இருந்தனர் என்ற தகவல்கள் வௌியாகவில்லை.
இதுகுறித்து முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தன் எக்ஸ் பதிவில், “ஊடுருவல்காரர்களுக்கு எதிராக மாநில அரசு தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும். இது மாநிலத்தின் எல்லை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் வௌியேற்றப்படுவார்கள்” என தெரிவித்துள்ளார்.
