×

சட்டீஸ்கர் ஆபாச சிடி வழக்கில் காங். முன்னாள் முதல்வர் பாகெல் விடுதலை ரத்து: சிபிஐ நீதிமன்றம் அதிரடி

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு ராமன்சிங் முதல்வராக இருந்த போது, அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் ராஜேஷ் முனட் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாலியல் சிடி வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த போலி சிடியை மும்பையில் தயாரித்து வெளியிட்டதாக அப்போதைய காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாகெல், பத்திரிகையாளரும், பாகெலின் முன்னாள் அரசியல் ஆலோசகர் வினோத் வர்மா, முன்னாள் பா.ஜ தலைவர் கைலாஷ் முரர்கா, ஆட்டோ மொபைல் வியாபாரி ரிங்கு கனுஜா மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் பாகெல் 2018ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. 2018ல் முதல்வராக ஆன பிறகு, பூபேஷ் பாகெல் மீதான விசாரணை தடைபட்டது. 2023ல் பாஜ மீண்டும் ஆட்சிக்கு வரும் வரை வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

அதன்பின் விசாரணை நடந்த போது 2025 மார்ச் 4ஆம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகெலை விடுவித்தது. மற்ற 4 பேர் மீதான விசாரணை தொடரப்பட்டன. இந்த உத்தரவை எதிர்த்து சிபிஐ மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த ராய்ப்பூர் சிபிஐ நீதிமன்றம் நேற்று பூபேஷ் பாகெல் விடுதலை செய்து உத்தரவிட்டதை ரத்து செய்தது.

Tags : Congress ,Chhattisgarh ,Former ,CM Baghel ,CBI ,Raipur ,Raman Singh ,Chief Minister ,Public Works ,Minister ,Rajesh Munat ,Congress… ,
× RELATED கணவரின் வருமானத்தை முடக்கிய...