நியூயார்க் : ஐக்கிய நாடுகள் சபையில் ஈரான் அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் சட்டவிரோதமாக கொல்லப்படுவதை தடுக்க வேண்டும் என UN மனித உரிமைகள் கவுன்சிலில் கொண்டு வந்த தீர்மானத்திற்கு இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஈராக் உள்ளிட்ட 7 நாடுகள் எதிர்த்து வாக்களித்துள்ளன.
