நாகர்கோவில் : நாகர்கோவிலில் திருக்குறள் மாணவர் மாநாட்டை தொடங்கி வைத்த, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி அளித்த பேட்டி: கடந்த 10 வருடங்களாகவே தமிழ்நாட்டில் தாமரை மலரும் என்று கூறி வருகிறார்கள். இதுவரை மலரவில்லை. 2026ம் ஆண்டும் மலராது. எடப்பாடி பழனிசாமியுடன், டிடிவி தினகரன் சேர்ந்து இருப்பது மண்ணெண்ணெய், தண்ணீர் ஒன்றாக கலந்தது போல் ஆகும். இரண்டும் ஒன்றாக கலந்தால் எதற்கும் பிரயோஜனம் இல்லை.
எடப்பாடியை முதலமைச்சராக்குவதற்கு தூக்கில் தொங்கி விடுவேன் என டி.டி.வி. கூறினார். எந்த இடத்தில் அதை செய்ய போகிறார் என்பது தெரியவில்லை. மோடி வருகையால் எடப்பாடி பழனிசாமி வேண்டுமென்றால் நிம்மதியாக தூங்குவார். ஆனால் இந்த நிம்மதி நிரந்தரம் இல்லை. இவர்களின் கூட்டணி தேர்தலில் வெற்றி பெறாது. தமிழ் தெரியாத பிரதமர் மோடி வட மாநிலங்களில் ஜெய் ஸ்ரீராம் என்பார். பிரதமர், திருக்குறள் சொல்வது சாத்தான் வேதம் ஓதுவது போன்ற கதையாகும். இவ்வாறு கூறினார்.
* மாவு இல்லாமலே வடை சுடும் மோடி
‘மோடியின் வாக்குறுதியை மக்கள் நம்ப மாட்டார்கள். மோடியின் வாக்குறுதி மாவு இல்லாமல் சுடப்படும் வடை தான். மோடி விசிட் பெரிய மாற்றத்தை உண்டாக்காது’ என்று லியோனி கூறினார்.
