ஊத்துக்கோட்டையை நகராட்சியாக தரம் உயர்த்தும் கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது: அமைச்சர் நேரு தகவல்

 

சென்னை: பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பது நிறுத்தி வைக்கப்படும் என நகராட்சி துறைஅமைச்சர் கே.என்.நேரு சட்டமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது, கும்மிடிப்பூண்டி தொகுதி, ஊத்துக்கோட்டை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா என சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊத்துக்கோட்டையை நகராட்சியாகும் கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது.

பேரூராட்சிகளின் அருகில் உள்ள ஊராட்சி பகுதிகளை இணைத்து பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்துவது குறித்து குழு அமைத்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஊராட்சிகளை நகர்ப்புற அமைப்புகளோடு சேர்த்தால் 100 நாள் வேலைத்திட்டம் நின்றுவிடும் என்று ஊராட்சிகளை சார்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஊராட்சிகளை பேரூராட்சிகளோடு இணைத்து நகராட்சிகளாக தரம் உயர்த்தும் பணியை தற்போது நிறுத்தி வைத்துள்ளோம் மிக அவசியமான கோரிக்கையை மட்டும் பரிசீலித்து வருகிறோம். இவ்வாறு அவர் பதில் அளித்தார்

 

Related Stories: