போராடிய ஊழியர்களை அழைத்துப் பேசி 95 சதவீத கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக ஆட்சியில் 90% சதவீத பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. போராடிய ஊழியர்களை அழைத்துப் பேசி 95 சதவீத கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளோம் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அரசு ஊழியர்களின் ஊதியம் குறித்து எடப்பாடி பழனிசாமி கொச்சைப்படுத்தி பேசியதை யாரும் மறந்துவிட மாட்டார்கள். அதிமுக ஆட்சியை போல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை நாங்கள் இரவோடு இரவாக கைது செய்யவில்லை.

உரிமையோடு போராடிய அரசு ஊழியர்களுடன் தொடர்ந்து அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருப்பது அதிமுகவுக்கு பிடிக்கவில்லை. அரசு ஊழியர்களின் 23 ஆண்டு கால கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றினோம். கோட்டையில் எனது அறைக்கே வந்து அரசு ஊழியர்கள் எனக்கு இனிப்பு ஊட்டினர். இன்னும் சில பிரச்சனைகள் உள்ளன, போராடுபவர்களை நாங்கள் வேடிக்கை பார்க்கவில்லை என முதல்வர் கூறினார்.

Related Stories: