மணல் குவாரி விவகாரம் தமிழ்நாடு அரசின் வழக்கில் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தமிழ்நாட்டில் சட்டவிரோத மணல் கொள்ளை குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் எனக்கோரியும், அதேப்போன்று மணல் குவாரி விவகாரத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் இரண்டு மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் திபங்கர் தத்தா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரீஷ் குமார்,‘‘மணல் குவாரி விவகாரத்தில் தலையிட அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை. ஏனெனில் மாநில அரசு இந்த விவகாரத்தில் பல சட்ட விதிகளை வகுத்துள்ளது. எனவே இதில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதிகள், வழக்கை நான்கு வாரம் ஒத்திவைத்தனர். இதில் தமிழ்நாடு அரசு போன்றே மணல் குவாரி விவகாரத்தில் கேரளா அரசு தொடர்ந்த வழக்கிலும் அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Stories: