நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விடை கடந்த ஒரு வாரமாக 560 காசாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ், முட்டை விலையில் 30 காசுகள் அதிரடியாக குறைத்தார். இதை தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 530 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. இது குறித்து தமிழ்நாடு கோழி பண்னையாளர்கள் சங்க செயலாளர் சுந்தரராஜன் கூறுகையில், ‘பொங்கல் பண்டிகை காரணமாக தொடர் விடுமுறையால் முட்டை விற்பனை குறைந்து விட்டது. மேலும் பெரும்பாலான மண்டலங்களில் முட்டை விலை குறைந்துள்ளது’ என்றார்.
