பவுன் ரூ.1,05,360 என்ற புதிய உச்சம் தொட்டது: தங்கம் விலை மேலும் அதிரடி, வெள்ளியும் போட்டி போட்டு உயர்கிறது

சென்னை: தங்கம் விலை நேற்று மேலும் அதிரடியாக உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,05,360 என்ற புதிய வரலாற்று உச்சத்தை தொட்டது. வெள்ளியும் போட்டி போட்டு உயர்ந்து வருகிறது. தங்கம் விலை நேற்று காலையில் கிராமுக்கு ரூ.50 அதிகரித்து கிராம் ரூ.13,170க்கும், பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு பவுன் ரூ.1,05,360க்கும் விற்பனையானது. அதே போல வெள்ளி விலையும் நேற்று காலையில் அதிரடியாக உயர்ந்தது.

நேற்று காலையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.292க்கும், கிலோவுக்கு ரூ.5,000 அதிகரித்து, பார் வெள்ளி ரூ.2,92,000க்கும் விற்பனையானது. இதன் மூலம் தங்கம் விலை கடந்த 4 நாட்களில் ரூ.3,360 உயர்ந்துள்ளது. மேலும் வெள்ளி விலை கடந்த 11 நாளில் ரூ.35 ஆயிரம் அதிகரித்துள்ளது.

Related Stories: