சென்னை: போகி பண்டிகை கொண்டாட்டத்தால் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது. காற்று மாசு அதிகபட்சமாக கும்மிடிப்பூண்டியில் 196 ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து இன்று காற்று மாசு அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னையில் 3 இடங்களில் காற்றின் தரக்குறியீடு மோசமடைந்துள்ளது.சென்னையில் எந்த ஒரு பகுதியிலும் காற்றின் தரம் நன்றாக இல்லை என மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொருத்தவரை காலை 7 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் காற்று மாசுபாட்டின் அளவு 196 ஆக தரக்குறியீட்டில் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மணலியில் 254, அரும்பாக்கத்தில் 210, பெருங்குடியில் 201 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு மோசம் அடைந்துள்ளது.கொடுங்கையூரில் 159, மணலியில் 181, ராயபுரத்தில் 164, வேளச்சேரியில் 163 மிதமாக காற்று மாசு அதிகரித்துள்ளது.
