- அமைச்சர்
- திமுக
- பொதுச்செயலர்
- Duraimurugan
- சென்னை
- தமிழ்நாடு அரசு
- திராவிடர் கழகம்
- பிரச்சாரக் குழு
- வழக்கறிஞர் அருள்மொழி
- விஷிக் பொதுச் செயலாளர்
- சிந்தன செல்வன்
சென்னை: அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனுக்கு அண்ணா விருது வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. திராவிடர் கழக பிரச்சாரக் குழு செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழிக்கு பெரியார் விருது அறிவிப்பு. விசிக பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வனுக்கு அம்பேத்கர் விருது வழங்கப்படும். எஸ்.எம்.இதயத்துல்லாவுக்கு காமராஜர் விருது, கவிஞர் நெல்லை ஜெயந்தாவுக்கு மகாகவி பாரதியார் விருது. கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான யுகபாரதிக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது. தமிழ்த்தென்றல் திரு.வி.க.விருது முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்புக்கு வழங்கப்படும். விருதாளர்களுக்கு ஜனவரி 16ம் தேதி திருவள்ளுவர் தினத்தன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கி சிறப்பிக்கிறார். விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.5 லட்சம் ரொக்கம், ஒரு சவரன் தங்கப்பதக்கம். தகுதியுரை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
