சென்னை: பொங்கலை ஒட்டி ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தல் மக்கள் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகத்தின் 1800 425 6151 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். தொலைபேசி மூலமாகவோ, வாட்ஸ் ஆப் மூலம் குறுந்செய்தி அல்லது குரல் பதிவாகவோ மக்கள் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
