- ஜல்லிக்கட்டு
- சரமரி வெடிக்
- புதுக்கோட்டை
- Jaisankar
- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வெப்பன்குடி
- இன்ஃபராசன்
- போவங்கனைக்கோட்டை
- சோக்கலிங்கம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே முன்விரோதம் காரணமாக ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வேப்பங்குடியை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மகன் இன்பரசன்(25). ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வந்தார். இவருக்கும் பொற்பனைக்கோட்டை சொக்கலிங்கம் மகன் விக்னேஷ்(25) தரப்பினருக்கும் ஜல்லிக்கட்டு காளை பிடிப்பதிலும், காளை வளர்ப்பதிலும் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்தாண்டு அக்டோபர் 20ம் தேதி சம்பட்டி விடுதி அடுத்த ராயப்பட்டி டாஸ்மாக் கடையில் விக்னேஸ்வரனின் நண்பர் பரமேஸ்வரன்(24) மது குடித்து கொண்டிருந்தார். அப்போது அவரிடம் இன்பரசன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து தகராறு செய்து தாக்கினர். இதுகுறித்த புகாரின்பேரில் செம்பட்டிவிடுதி போலீசார் வழக்குப்பதிந்து பரமேஸ்வரன், அன்பரசன், ராஜா மற்றும் ராஜேஷ் ஆகியோரை கைது செய்து நீதிமன்ற பிணையில் விடுவித்தனர்.
இந்நிலையில் வல்லத்திராக்கோட்டை அடுத்த அழகாம்பாள்புரத்தில் இன்று காலை 7.30 மணியளவில் பைக்கில் இன்பரசன் சென்றார். அப்போது அவரை விக்னேஷ் மற்றும் அவரது நண்பர்கள் பாப்பன்கொல்லை ரோகேஷ், திருமூர்த்தி, சீனு, ரஞ்சித் மற்றும் சிலர் வழிமறித்து தாக்கினர். மேலும் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரி வெட்டினர். இதில் படுகாயமடைந்த இன்பரசனை அப்பகுதியினர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இன்பரசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வல்லாதிரக்கோட்டை போலீசார் கொலை வழக்குப்பதிந்து 5 பேரை தேடி வருகின்றனர்.
