×

ஜம்மு-காஷ்மீர்: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே நேற்று மாலை அடுத்தடுத்து பல ட்ரோன்கள் ஊடுருவ முயற்சி!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் நௌஷேரா செக்டாரில், கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு (LoC) அருகே நேற்று மாலை பாகிஸ்தான் ஆளில்லா விமானம் ஒன்றை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல ஆளில்லா விமானங்கள் காணப்பட்டதாகவும் அவர்கள் கூறினர். அந்த ஆளில்லா விமானங்கள் துப்பாக்கிகளையோ அல்லது போதைப்பொருட்களையோ வீசியுள்ளனவா என்பதைச் சரிபார்க்க ராணுவம் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

ராணுவத்தினர் இயந்திரத் துப்பாக்கிகளைக் கொண்டு ஆளில்லா விமானங்களை சுட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. மற்றொரு ஆளில்லா விமானம் ராஜௌரி மாவட்டத்தில் மாலை 6.35 மணிக்கு காணப்பட்டது. சம்பாவின் ராம்நகர் செக்டாரில் உள்ள சக் பாப்ரால் கிராமத்தின் மீது, ஆளில்லா விமானம் போன்ற ஒரு பொருள், மாலை 7.15 மணியளவில் சில நிமிடங்கள் வட்டமிட்டுக் கொண்டிருந்ததாக அதிகாரிகள் கூறினர்.

பூஞ்ச் ​​மாவட்டத்தில், கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகில் அமைந்துள்ள மங்கோட் செக்டாரில், மாலை 6.25 மணியளவில், டைன் பகுதியிலிருந்து டோபா பகுதியை நோக்கி மற்றொரு ஆளில்லா விமானம் போன்ற பொருள் நகர்ந்து செல்வது காணப்பட்டது.

Tags : Jammu and Kashmir ,Srinagar ,Indian Army ,Line ,Naushera ,
× RELATED கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...